சென்னையில் இருந்து மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மைசூர் புறப்பட்டு சென்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த பொது ,எதிர்பாராவிதமாக, ரயிலில் உணவு தயாரிக்கும் பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பற்றியதையடுத்த ஜோலார்பேட்டைக்கும் சின்னகம்பட்டுக்கும் இடையே ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் போராடி அடுத்தடுத்த பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுத்துள்ளனர். இந்த விபத்தில் சாப்பாடு தயாரிக்கும் பெட்டி சேதமடைந்துள்ளது.
0 Comments