Tamil Sanjikai

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதென 2016 வருடம் ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பில் 51.9 சதவீத மக்களால் முடிவு செய்யப்பட்டது. அதற்கு பிரெக்ஸிட் (British Exit ) என பெயரிடப்பட்டது. அதற்கான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதில் மக்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை அறிய பர்மிங்ஹாம் பி.எம்.ஜி. ரிசர்ச் அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் பங்கேற்றவர்களில் 53 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதை இங்கிலாந்து தாமதப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment