பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி, அமேசான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழுவில் இணைந்துள்ளார்.
சுமார் 13 ஆண்டுகள் பெப்சிகோவில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்தப் பதவியிலிருந்து விலகினார். ஆனாலும் அதன் நிர்வாகக் குழுவில் தொடர்ந்து பணியாற்றிய வந்த நிலையில், தற்போது அமேசானில் இணைந்துள்ளார். இதன் மூலம் அமேசான் நிர்வாகக் குழுவில் இடம்பெறும் இரண்டாவது பெண் எனும் பெருமையையும் இந்திரா நூயி பெற்றுள்ளார்.
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ரோசலிண்ட் ப்ரீவர் (Rosalind Brewer) ஏற்கெனவே அமேசான் நிர்வாகக் குழுவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments