Tamil Sanjikai

சமீபத்தில் வெளியான மஹா’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் காட்சியில் நடிகை ஹன்சிகா காவி உடை அணிந்து புகைப்பிடித்தபடி இருக்கிறார். பின்னணியில் காசி கோயில் காட்டப்படுகிறது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. சர்கார்' பட ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட்டுடன் போஸ் கொடுத்ததற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க,தான் ஹன்சிகா விவகாரத்திலும் முதலில் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க சமூக நீதி பேரவை மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் ஜானகிராமன், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஹன்சிகா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

`காசி கோயில் பின்புறம் ருத்ராட்ச மாலை அணிந்து காலில் செருப்பு, வலது கை விரல்களில் சுருட்டு போன்ற சிகரெட்டை வைத்துப் புகைப்பது போன்ற காட்சி இந்து மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. எனவே, நடிகை ஹன்சிகா மற்றும் மஹா திரைப்பட இயக்குநர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஹன்சிகா மீதான வழக்கு விசாரணை 14-ஆம் தேதி நீதிபதி தீனதயாளன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

0 Comments

Write A Comment