விருதுநகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ரின் 102வது பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமமுகவினர், அதிமுக கொடியை கிழித்தெறிந்ததால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
எம்ஜிஆரின் 102வது பிறந்த தினத்தையொட்டி விருதுநகர் - சாத்தூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். அப்போது, எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அமமுகவினர், எம்ஜிஆர் சிலையில் அவர்களது கட்சி கொடியை கட்டினர். இதற்கு அங்கிருந்த கூடியிருந்த அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் இரு தரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அமமுகவினர், எம்ஜிஆர் சிலையை சுற்றி ஏற்றப்பட்டிருந்த அதிமுகவின் கொடியை கிழித்தெறிந்தனர். இதனால், அதிமுகவினருக்கும் அமமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடியை சேதப்படுத்திய அமமுகவை சேர்த்த கண்ணாயிரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
0 Comments