Tamil Sanjikai

பாஜகவின் மிக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, இருவருக்குமே, இதுவரை எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ஏற்கனவே, அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதி அமித்ஷாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கான்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு முரளி மனோகர் ஜோஷி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் என்னிடம் கான்பூர் அல்லது வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டாம் என்று என்னை கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குஜராத் காந்திநகரில் கடந்த 5 முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்து வரும் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை சீட் அளிக்கப்படவில்லை. அத்வானிக்கு 91வயது ஆகியதால், வயதுமூப்பு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல முரளி மனோகர் ஜோஷிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னதாக, உத்தரபிரதேச பாஜகவின் நட்சத்திர பிரசாரர்கள் பட்டியலிலும் இரு தலைவர்களின் பெயரும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

0 Comments

Write A Comment