Tamil Sanjikai

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

ராஞ்சியில் நடைபெற்று வரும் போட்டியில், 3ஆம் நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் 162 ரன்களில் ஆல் அவுட் ஆன தென்னாப்பிரிக்கா ஃபாலோ ஆன் பெற்று மீண்டும் பேட்டிங் செய்தது. இதையடுத்து, 2ஆவது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்கா இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மழ மழவென விக்கெட்டுகளை இழந்து , 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

203 ரன்கள் பின்தங்கியுள்ள தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளதால் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

இந்திய அணி தரப்பில் முகமது சமி 3, உமேஷ் யாதவ் 2, அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

0 Comments

Write A Comment