மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மதுரையில் கடந்த 2007ம் ஆண்டு தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட்டதால் தினகரன் நாளிதழ் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமீபத்தில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, முன்னாள் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட போது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி, ராஜாராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments