ஜம்மு - காஷ்மீரில் மெகபூபா முப்தி, ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில், சட்டப்பேரவையை ஆளுநர் சத்யபால் சிங் அதிரடியாக கலைத்து உத்தரவிட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியின் முதலமைச்சராக இருந்த முப்தி முகம்மது சயீது 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி காலமானார். அதையடுத்து ஏப்ரல் 4- ஆம் தேதி காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீதுவின் மகள், மெகபூபா முப்தி காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றார். கடந்த மே மாதத்தில் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக இடையே கருத்து மோதல்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து ஜுன் மாதம் பாஜக கூட்டணியிலிருந்து விலகவே, அதே மாதம் 20-ஆம் தேதி ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளின் ஆதரவு தங்களுக்கு உள்ளதால், பெரும்பான்மைக்கு தேவையான 56 எம்.எல்.ஏக்களின் உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதால், ஆட்சியமைக்க உரிமை கோர முயன்றதாக மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.
அதற்கான கடிதத்தையும் வெளியிட்ட அவர், ஆளுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும், ஆனால் அது முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஃபேக்ஸ் அனுப்பும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும், இமெயில் வழியாக கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த சில மணி நேரத்தில் காஷ்மீர் மாநில சட்டப்பேரவையை கலைப்பதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே சட்டப்பேரவை கலைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெகபூபா முஃப்தி, தங்களுடைய கடிதத்தை பெற முடியாத ஆளுநர் மாளிகையின் ஃபேக்ஸ் எந்திரம், சட்டப்பேரவை கலைக்கப்பட்ட அறிவிப்பை அனுப்பும் போது மட்டும் செயல்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments