Tamil Sanjikai

திருமணமாகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என்று, வழக்கு ஒன்றில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தையை பிரிந்து வாழும் திருமணமாகாத 18 வயதுடைய பெண் ஒருவர் தனக்கு தன தந்தையிடமிருந்து ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனால்,18 வயது பூர்த்தி அடைந்துவிட்டதால், ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், , உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, திருமணமாகாத மேஜர் பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன், சென்னை குடும்பநல உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, ஜீவனாம்சம் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்ய அந்த பெண்ணிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

0 Comments

Write A Comment