Tamil Sanjikai

தமிழ்நாடு அரசு கேபிள் டிவியின் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் ரூ.130+ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் நீங்கலாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்றும், மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 35.12 லட்சம் இலவச செட்டாப் பாக்ஸ்கள் அரசு கேபிள் டிவி மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment