த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது .
மன்மோகன் சிங் பிரதமரானது மற்றும் அவர் பிரதமரான கால கட்ட நிகழ்வுகளை தழுவி, த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கெர் நடித்துளளார். இந்த படத்தில் மன்மோகன் சிங் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி, இந்த படத்தை தடை செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு தடை விதிக்க வாய்ப்பில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
0 Comments