காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை புரிந்துகொண்டதாகவும், மத்திய அரசுடன் நடந்த பேச்சு சுமுகமாக இருந்ததாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருப்பதாகவும், சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
அரசுமுறை பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு பட்டது இளவரசர், முகமது பின் சல்மான் ஆகியோர் இடையே இருதரப்பு பேச்சு நடந்தது. அப்போது, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டது குறித்து தோவல், இளவரசரிடம் விளக்கினார்.
இந்தியாவின் நடவடிக்கையை புரிந்துகொண்டதாக கூறிய இளவரசர், இந்தியாவில் முதலீடு செய்ய தான் ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார். சவுதி இளவரசரின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
0 Comments