Tamil Sanjikai

அமெரிக்காவை எதிர்க்க முழு வலிமையுடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்துக்கான ஈரான் தூதர் ஹமீத் பெய்தினிஜாத் ((Hamid Baeidinejad )) தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாகக் கூறியும், அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறியும் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மேலும் தனது விமானந்தாங்கி போர்க்கப்பலையும் ஈரான் அருகில் நிறுத்தியிருப்பதால் பேர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இங்நிலையில் இங்கிலாந்துக்கான ஈரான் தூதர் ஹமீத் பெய்தினிஜாத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வளைகுடா பகுதியை அமெரிக்கா அழிக்க நினைப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் அபாயகரமான இந்த விளையாட்டை அமெரிக்கா துவக்கியுள்ளதாக கூறிய அவர், தாங்கள் அந்நாட்டினை எதிர்க்க முழு பலத்துடன் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment