Tamil Sanjikai

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அந்நாட்டு அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து களமிறங்கிய அவர், தோல்வியடைந்தார். இதனால் ஹிலாரி இம்முறை போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அமெரிக்க மக்களுக்கு நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கலந்துரையாடிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment