Tamil Sanjikai

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் மதுரையில் 6-ந் தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் கடந்த 2-ந் தேதி வெளியிட்ட கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை 6-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு மதுரை பாண்டியன் ஓட்டலில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குழு தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வெளியிடுகிறார். முதல் பிரதியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சஞ்சய் தத் பெற்றுக்கொள்கிறார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி மற்றும் துறைகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

0 Comments

Write A Comment