Tamil Sanjikai

கேரளாவில் ஆட்சி செய்யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆலப்புழா தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள 19 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றி உள்ளது.

இந்த தோல்வி தான் சற்றும் எதிர்பாராதது என முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மேற்கொண்ட நிலைப்பாடு, மாநிலத்தில் பா.ஜனதா எந்த தொகுதியையும் பெற முடியாத நிலையை ஏற்படுத்தியது. இந்த பின்னடைவு குறித்து கட்சி விரிவாக மறு ஆய்வு செய்யும்’ என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி முன்னணி மாநிலத்தில் படுதோல்வி அடைந்திருப்பதால், முதல்-மந்திரி பினராயி விஜயன் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment