தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நிர்வாகிகளுடன் அலுவலகத்திற்கு சென்று பூட்டை அகற்ற முயன்றார். அப்போது போலீசாருடன் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஷாலை, கைது செய்து காவலில் அடைக்கப்பட்டார், பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார் .
இதுதொடர்பாக விஷால் ஆதரவாளர் அன்புதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. இந்நிலையில் கிண்டி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், தயாரிப்பாளர் அலுவலக கட்டடத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினர்.
0 Comments