Tamil Sanjikai

அசாமில், 11ம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கோவிலில் வைத்து, இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின், சோனிட்புர் மாவட்டத்தில் தேயிலை தோட்டத்தை ஒட்டி, 11ம் நூற்றாண்டை சேர்ந்த விஸ்வகர்மா கோவில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த குதுப்புதீன் என்ற இளைஞர், இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி அந்த கோவிலுக்கு அழைத்த சென்றார்.

அங்கு அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த உணவுப்பொருளை கொடுத்த அவர், அப்பெண் மயக்கம் அடைந்ததும்,அவரை கோவில் வலகத்துக்குள்ளேயே பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

அப்போது அங்கு வந்த கோவில் நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குதுப்புதீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பெண்ணை பலாத்காரம் செய்த காட்சிகளையும் அந்த நபர் தன் மொபைல் போனில் பதிவு செத்திருந்ததையும் போலீசார் கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர்.

0 Comments

Write A Comment