Tamil Sanjikai

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் மனோ. இவர் புழல் என்கிற படத்தில் மூன்று நாயகர்களுடன் ஒருவராக நடித்திருந்தார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் மனோ புழல் என்கிற படத்தில் மூன்று நாயகர்களுடன் ஒருவராக நடித்திருந்தார். அதோடு பல திரைப்படங்களில் கேரக்ட்டர் ரோலிலும் நடித்துள்ளார். இவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், லிவியா என்னும் மனைவியும் உள்ளனர். இந்நிலையில் மனோ தன்னுடைய மனைவியுடன் நேற்றிரவு அம்பத்தூர் நோக்கி காரில் பயணித்து கொண்டிருந்த பொழுது கார் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மனோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . படுகாயத்துடன் மீட்கப்பட்ட மனோவின் மனைவி லிவியா அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Write A Comment