இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் இருவரும் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்ட ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவிருப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இரண்டு நாட்கள் சுற்று பயணமாக இந்தியா வந்திருக்கும் ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இருவரும், இருநாடுகளின் வளர்ச்சிக்காக, வேலை வாய்ப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம் என்பது போன்று சுமார் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கும் நிலையில், உலகத்தையே அச்சுறுத்தும் பயங்கரவாததிற்கு எதிராக இணைந்த செயல்பட தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
"முதலில் பயங்கரவாதம் என்பதை ஓர் நாட்டின் பிரச்சனையாக நாம் பார்ப்பதை விடுத்து, சர்வதேச பிரச்சனையாக பார்க்க வேண்டும். அதனால் அவதிக்குள்ளாகும் நாடுகளை மீட்டெடுக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் முன்வரவேண்டும்.
ஒவ்வோரு நாடும் தனது மண்ணில் பயங்கரவாதம் ஊடுறுவாத வகையில் பாதுகாப்பு முயற்சிகளை பலப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும்.. இத்தகைய அச்சுறுத்தல்கள் நிறைந்த பயங்கரவாததிற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்க இந்தியாவும் ஜெர்மனியும் தயாராகி விட்டது" என்று இருநாட்டு தலைவர்களும் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து, "பயங்கரவாதத்தை தடுப்பதற்கான திட்டங்கள் குறித்த விரிவான கலந்துரையாடலுக்காக வெகு விரைவில் மீண்டும் நாங்கள் இருவரும் சந்திப்போம்" என்றும் உறுதியளித்துள்ளனர்.
0 Comments