அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
விஜய் அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா என்று இன்னும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பாடல் ஒன்று நேற்று இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியானது. ‘சிங்கப்பெண்ணே...’ எனத் தொடங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். ’பிகில்’ ஷூட்டிங்கின் போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்த நிலையில் மீண்டும் பாடலும் லீக்காகி இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடலின் இறுதி வடிவம் இதில்லை என்றாலும் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். பாடல் லீக் குறித்து படக்குழு விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
லீக்கான பாடல் குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல் செய்து உள்ளார். லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டுக்கள்தானே. புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்துருக்கு. நல்லாத்தான் இருக்கு என கூறி உள்ளார்.
0 Comments