தேர்தலின்போது, யாருக்கு வாக்களித்தோம் என்பது பற்றி, பொய்யான புகார் அளித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
சென்னை, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த பின்பு அருகே வைக்கப்பட்டு உள்ள விவிபிஏடி (Voter verifiable paper audit trail - VVPAT) இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து பதிவான சீட்டு 7 வினாடிகள் தெரியும் என்றும், பின்பு தானாகவே அந்த சீட்டு இயந்திரத்திற்குள் விழுந்து விடும் என கூறினார்.
தான் வாக்களித்த சின்னம் இல்லாமல் விவிபிஏடியில் வேறு சின்னம் காண்பித்தால் வாக்களித்தவர் உடனடியாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம், வாக்களித்தது குறித்துபொய்யான புகார் கூறியது தெரியவந்தால் 6 மாதம் சிறை தண்டனையும் , ஆயிரம் ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 30 ஆயிரம் வெப் கேமராக்கள் தேவைப்படுவதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
0 Comments