Tamil Sanjikai

ட்விட்டர் நிறுவனர்களுள் ஒருவரான இவான் வில்லியம்ஸ், அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளாக ட்விட்டர் நிர்வாகக் குழுவில் பணிபுரிந்துவந்த அவர், தற்போது மற்ற பணிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் பிப்ரவரி மாத இறுதியுடன் தன்னை அப்பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இவான் வில்லியம்ஸ், நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இவான் வில்லியம்ஸ் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாகவும் சில ஆண்டுக்காலம் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment