இந்திய ரிசர்வ் வங்கி, ஒரு லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3 லட்சம் கோடி ரூபாய்க்குள் மத்திய அரசுக்கு வழங்கலாம் என பேங்க் ஆப் இந்தியா மெரில் லின்ச் என்ற முதலீட்டு வங்கி கணித்து கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் ஜிடிபியில் அரை சதவீதம் முதல் ஒன்றரை சதவீதம் வரையிலான நிதிக்கு இது சமமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாகவே ரிசர்வ் வங்கியிடம் மூலதனம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கிடயிடம் உபரியாக உள்ள நிதியில் இருந்து இயல்புக்கு மாறாக கூடுதல் தொகையை எதிர்பார்ப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து விட்ட நிலையில், ரிசர்வ் வங்கிக்கு கையிருப்பாக எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மதிப்பிடுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து சிறப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments