இண்டிகோ விமானத்தில் புகைப்பிடித்த பயணி மீது கோவாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று இண்டிகோவின் 6E - 947 என்ற எண் கொண்ட விமானம் அகமதாபாத்தில் இருந்து கோவாவுக்குப் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானக் கழிவறையில் இருந்து சிகரெட் புகைக்கும் நாற்றம் வந்துள்ளது. இதை அடுத்து கழிவறையில் இருந்து வெளியே வந்த நபரிடம், இந்திய வான்பரப்பில் விமானத்தில் புகைப்பிடித்தல் குற்றம் என எடுத்துரைக்கப்பட்டது.
பின் விமானம் கோவாவில் தரையிறங்கியதும், உள்ளூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு அந்த பயணி மீது வழக்குப் பதிவு செயயப்பட்டது அத்துடன் அந்த நபர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
0 Comments