உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் பொது ஷிகர் தவான் காயமடைந்தார், இந்த காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க தவானுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2-வது இந்தியர் ஷிகர் தவான் ஆவார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments