Tamil Sanjikai

இலங்கையில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு, மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டபல முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழக கமாண்டோ படையினர் கோவைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் 10 குழுக்களாக பிரிந்து மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

இதனிடையே ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹீர் என்பவரை நாகை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Write A Comment