Tamil Sanjikai

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் உள்ள வன விலங்குள் சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் புயல் காற்றில் வேரோடு சாய்ந்தன.

அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரக்குவியல்களாகவே காணப்பட்டன. இதனால் வன விலங்குகளுக்கு என்ன நேர்ந்தது என வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட வன உயிரின காப்பாளர் நாகசதீஷ் கிடிசாலா தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது ,கஜா புயல் தாக்கத்தில் 17 வெளிமான்களும், ஒரு புள்ளி மானும், 4 பன்றிகளும், 373 பறவைகளும் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு பணி இன்னும் ஒருவாரத்தில் நிறைவடையும், அப்போது இறந்த விலங்குகள், பறவைகள் குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கோடியக்காட்டில் முன்புபோல் மரங்கள், மூலிகைச் செடிகளை நட்டுப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Write A Comment