Tamil Sanjikai

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 21ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி, ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு தடை செய்ய கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, அரசியல் ரீதியாக பழிவாங்கவே வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடைவிதித்து, ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்களித்துடன், மனு குறித்து தமிழக அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

0 Comments

Write A Comment