உக்ரைனில், சிறுமி ஒருவர் கண்களை மூடிக்கொண்டு குத்து சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் நாட்டின் ஹார்கிவ் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி கிரா மகோகோனேன்கோ, குத்துச்சண்டை பயிற்சியில் தனது திறனை அதிகரிக்க அவர் தனது கண்களை மூடிக்கொண்டு குத்துண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மகள் பயிற்சியாளருடன் கண்களை மூடிக்கொண்டு பயிற்சியில் ஈடுபடுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்த சிறுமியின் தந்தை, அதனை வீடியோ எடுத்து வலைதளத்தில் பரவவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
0 Comments