ஆளே இல்லாமல் எதிரிகளின் இலக்கை அதிவேகமாக சென்று தாக்கக்கூடிய பறக்கும் ஊர்தி ( அபியாஸ்) திங்கட்கிழமை (நேற்று) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) சார்பில், ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது, ரேடார் உள்ளிட்ட தொழில்நுட்பத்தின் மூலம் அபியாஸின் இயக்கம் கண்காணிக்கப்பட்டதாகவும், அதன் செயல்பாடு முழு திருப்தி அளிக்கும்படி உள்ளதென்றும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
0 Comments