பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்தில் வசித்து வரும் சிந்தி மக்களுக்கு எதிராக மனித உரிமை விதிமீறல்கள் நடந்து வருகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி லண்டனை அடிப்படையாக கொண்ட உலக சிந்தி காங்கிரஸ் அமைப்பின் பொது செயலாளரான லக்கு லுஹானா கூறும்பொழுது, சிந்தி இன மக்கள் அவர்களது வரலாற்றில் மிக மோசம் நிறைந்த அராஜகங்களை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து இதுபற்றி கூறும்பொழுது, ஒரு மாதத்தில் சராசரியாக 10 பேர் கட்டாயப்படுத்தி காணாமல் போக செய்யப்படுகின்றனர். மதசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை கடந்த 2 மாதங்களில் முன்எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து உள்ளது. அதிக ஆபத்தில் உள்ள சிந்தி இந்து சமூகத்தின் 13 மைனர் சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
சிந்தி மக்களின் வாழ்க்கை தொடர்ச்சியாக சூறையாடப்படும் நிலையில், சட்டவிரோத மற்றும் தகாத முறையில் சிந்தி மக்களின் வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
கட்டாயப்படுத்தி பசி மற்றும் நோயால் அவர்களை மரணமடைய செய்வதுடன், கட்டாயப்படுத்தி காணாமல் போகவும் செய்கின்றனர். அதனால், ஐ.நா. அமைப்பு உண்மை கண்டறியும் குழு ஒன்றை இங்கு அனுப்பி, அரசு அமைப்புகளால் அடக்குமுறைகளுக்கு ஆளான மக்களை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments