சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசத் தொடங்கினார்.ஆனால் அவருக்கு மைக் ஆன் செய்யப்படாமல் , அவரது கோரிக்கையை பிறகு கூறி விவாதிக்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், வெள்ள நிவாரணமாக மத்திய அரசு குறைவான தொகையை ஒதுக்கியுள்ளதாகக் கூறிவிட்டு தி.மு.க எம்.எல்.ஏக்களுடன் அவையை புறக்கணிப்பதாக கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கஜா புயல் பேரிடருக்கான போதுமான நிவாரணம் பெறாதது, ஸ்டெர்லைட் தொடர்பாக அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுக்காதது, மேகதாது விவகாரம், ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது உள்ளிட்ட பல விவகாரங்களால் சட்டப்பேரவையை புறக்கணித்திருப்பதாக கூறினார். ஆளுநர் உரையால், எந்த நன்மையும் இல்லை என்பதால் , அதனைக் கண்டித்து தாங்கள் வெளிநடப்பு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments