Tamil Sanjikai

பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான். ஒரு சிலர் அதை நம்புகின்றனர், ஒரு சிலரோ அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுகின்றனர். பேய்கள் இரண்டு வகைப்படும் ஒன்று சாதுவான பேய் அதாவது பிறருக்கு எந்த விதமான தொந்தரவு செய்யாமல் இருக்கும். இன்னொன்று தான் இறந்து விட்டோமே என்ற கோபத்துடன் பிறரை பழி வாங்கும் என்று பலரும் கூறி கேட்டிருப்பீர்கள்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், ஆபானி என்கிற இடத்தில் அமைந்துள்ளது மாரிகாம்பா அம்மன் கோவில். இங்கு பூசாரியாக இருக்கும் மல்லிகார்ஜுன் என்பவர், ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாகக்கூறி சரமாரியாக சவுக்கால் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments

Write A Comment