தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பானி’ புயல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் புயல் காரணமாக உருவான சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் பேசினேன். முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன். அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்தினேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் பானி புயலை முன்னிட்டு 4 மாநிலங்களுக்கு முன் உதவித்தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு ரூ.309 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு ரூ.340 கோடி முன் உதவித்தொகையை விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆந்திராவுக்கு ரூ.200 கோடி முன் உதவித் தொகையும், மேற்கு வங்கத்திற்கு ரூ.235 கோடியும் முன் உதவித்தொகையாக வழங்க உத்தரவிட்டு உள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
0 Comments