தோனி ஓய்வு பெறுவதாகக் கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று அவரது மனைவி சாக்க்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி இன்று இரவு செய்தியாளர்களை சந்திக்து தனது ஓய்வு குறித்து அறிவிக்க இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தோனி விலகல் என்ற செய்தி உண்மை இல்லை என்றும் இதுவரை தோனி ஓய்வு அறிவிப்பு தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
அதேநேரத்தில் இரண்டு மணிநேரங்களுக்கு முன்னதாகவே, தோனியின் மனைவி சாக்க்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இவை அனைத்தும் வதந்தியே' என்று பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
0 Comments