ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வெவ்வேறு பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், அந்த இயக்கங்களில் இருந்து விலகி மீண்டும் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்துள்ளதாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாத அமைப்புகளும், பயங்கரவாதிகளும், அங்குள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அரசுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடச் செய்கின்றனர். அந்த வகையில், பல்வேறு பயங்கரவாத இயக்கங்களில் இருந்து வந்த, இளைஞர்கள் 5 பேர், அந்த இயக்கங்களில் இருந்து விலகி, தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்துள்ளனர்.
அவர்கள் பயங்கரவாதத்தை கைவிட பெரும் உதவியாக இருந்த அவர்களின் குடும்பத்தார், மாநில போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியுள்ளார். மேலும், அந்த ஐவர் யார் என்ற ரகசியம் வெளியிடாமல் காக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
0 Comments