பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என ஆளுநர் பன்வாரிலால் சட்டப்பேரவை உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூடியதும், ஆளுநர் பன்வாரிலால் உரையை தொடங்கினார். அப்போது உரையாற்றிய அவர், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
நதிநீர்ப் பிரச்னையில் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய ஆளுநர், மேகதாதுவில் புதிய அணை கட்டும் முதற்கட்ட ஆய்வுக்கு கண்டனமும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டத்தை தவிர, மற்ற மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
0 Comments