கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கு சேமித்து வைக்காமல், மனித நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் சேமித்து வைக்க சாத்தியக் கூறு உள்ளதா? என மக்களவையில், தி.மு.க. உறுப்பினர் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.
கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறனை, அணுக்கழிவு சேமிப்பு குறித்து மக்களுக்கு உ ண்டான அச்சத்தை போக்கும் பணியில் அரசுக்கு உதவ செய்ய வருமாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள் விடுத்தார். உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுவதாகவும், கூடங்குளம் மட்டுமல்ல நாட்டின் மற்ற அணு உலைகளிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுவதாகவும், இது பாதுகாப்பானது தான் என்றும், ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.
0 Comments