பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவருமான மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.
25-ந் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பபட்டு உள்ளது.
0 Comments