Tamil Sanjikai

பாகுபலியில் அதிரடி சண்டை காட்சிகளில் வந்து ரசிகர்களை கவர்ந்தார் தமன்னா .

இது அவரது திரையுலகை வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. இப்போது வழக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து ரூ.120 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய குயின் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘தட் இஸ் மகாலட்சுமி’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் தமன்னாவுக்கு முக்கிய வேடம். தற்போது விஷால் ஜோடியாக ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். முழு நீள சண்டை படமாக தயாராவதால் படத்திற்கு ஆக்‌ஷன் என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் தமன்னா பெண் ராணுவ கமாண்டோ அதிகாரியாக வருகிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் மற்றும் பிரத்யேகமாக சண்டைகள் கற்று நடித்து இருக்கிறார். விஷாலுக்கும் ராணுவ அதிகாரி வேடம். படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

0 Comments

Write A Comment