பழைய நண்பர்களுடன் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியதற்கு, பாஜகவுடன் தி.மு.க கூட்டணி வைக்க போவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி, பழைய நண்பர்களுக்கு கூட்டணி வைப்பதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என நேற்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதில் கூறி இருப்பதாவது:-
பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று ஆணித்தரமாக சொல்கிறேன். பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல; அவர் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆரோக்கியமான கூட்டணியுமல்ல. நாட்டை பிளவுபடுத்தும் எந்த திட்டத்தையும் முன்வைக்காததாலேயே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது. வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. என கூறி உள்ளார்.
0 Comments