மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இன்று ஒரே நாளில் 60 மி.மி.,க்கு மேல் மழை பெய்தது. குறிப்பாக 1.5 மணி நேரத்தில், 44 மி.மி., மழை பெய்ததினால், நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
ஏற்கனவே பருவ மழை முடிவுக்கு வராத நிலையில், தற்போது புனே நகரில் இன்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அங்கு போக்குவரத்து சீராவதில் சிக்கல் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
0 Comments