டெல்லியில் காற்று மாசு கடுமையான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறியுள்ளது. தீபாவளிக்குப் பின் காற்று மாசு உச்சத்தை எட்டிய நிலையில், இரவில் சாரல் மழை பெய்ததன் காரணமாக தற்போது சிறிதளவு மட்டும் குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். டெல்லியில் காற்று மாசைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்குகிறது.
பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் டெல்லியில் காற்று மாசு குறைந்தபாடில்லை. காற்று, மழை போன்ற வானிலை நிலவரமும், அங்கு மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை. இதன்காரணமாக மேக விதைப்பு என்ற செயற்கை முறை மூலம் மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுக்கவுள்ளது. மேகங்களில் ரசாயனங்களை தூவுவதன் மூலம் மழையை பெய்யச் செய்வதே மேக விதைப்பு முறை.
டெல்லியில் காற்று மாசு மோசமானால் அடுத்த நடவடிக்கையாக இதை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
0 Comments