உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.
இலங்கை அணி வீரர் கருணாரத்னே 10 ரன்னில் பும்ரா பந்தில் அவுட் ஆனார். கருணாரத்னே அவுட் மூலம் 57 போட்டிகளில் 100-வது விக்கெட்டை வீழ்த்தி பும்ரா சாதனை நிகழ்த்தி உள்ளார். இலங்கை அணி 10.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து உள்ளது.
போட்டிகள் - 57
இன்னிங்ஸ் - 57
விக்கெட் - 100
சராசரி - 21.78
எகனாமி - 4.52
ஸ்ட்ரைக் ரேட் - 28.97
பெஸ்ட் - 27/5
இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும்.
0 Comments