ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக வெகு விரைவில் காஷ்மீர் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் சந்தித்து உரையாடினர்.
கடந்த ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அம்மாநில மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக கூடிய விரைவில் காஷ்மீர் மாநிலம் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் டெல்லியில் சந்தித்து உரையாடினர்.
0 Comments