தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் நேற்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திமுக இளைஞரணி மண்டல மாநாடு 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் திமுக இளைஞரணியில் சேரலாம் என வயது வரம்பு மாற்றம் செய்யப்பட்டது . தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். செப்டம்பர் 14 முதல் நவம்பர் 14 ஆம் தேதிக்குள் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments