ஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள உள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு புகை எழுந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என க்யோட்டோ நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றியதாக ஒருவரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ விபத்தில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும் தீவிபத்து ஏற்பட்ட 3 அடுக்குகள் கொண்ட கட்டிடத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
0 Comments