Tamil Sanjikai

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

156.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார். இரட்டை சதம் அடித்து கெத்துக்காட்டி விளையாடிய கோலி, 254 ரன்கள் அடுத்து ஆட்டம் இழக்காமல் அசத்தினார். கோலியின் தலைமையில் இந்திய அணி 10ஆவது முறையாக 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 254 நாட் அவுட், மயங்க் அகர்வால் 108, ஜடேஜா 91 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3, மகாராஜா, முத்துசாமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

0 Comments

Write A Comment